Main Menu

மாலி நாட்டில் இருந்து வெளியேறிய பிரெஞ்சு இராணுவத்தினர்

மாலி நாட்டில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பிரெஞ்சு இராணுவத்தினர் அனைவரும் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதத்தில் இருந்து படிப்படியாக பிரெஞ்சு இராணுவத்தினர் வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், இன்று திங்கட்கிழமையுடன் அனைத்து வீரர்களும் நாடு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக மாலி நாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிராக போராடி வந்த பிரெஞ்சு இராணுவத்தினரை மீள அழைப்பதாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்திருந்தார். மாலி அரசுக்கும் பிரெஞ்சு அரசுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதை அடுத்து, கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி இதனை மக்ரோன் அறிவித்திருந்தார்.

அதையடுத்து, கட்டம் கட்டமாக பிரெஞ்சு இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேற ஆரம்பித்தனர். இந்நிலையிலைலேயே அனைத்து வீரர்களும் நாடு திரும்பியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

பகிரவும்...