Main Menu

மாலி: சாலையோர குண்டு வெடிப்பில் ஐ.நா. அமைதி தூதர் உயிரிழப்பு

மாலி நாட்டின் வடகிழக்கு பகுதியில் சாலையோரம் கிடந்த குண்டு வெடித்ததில் ஐ.நா. சபையின் அமைதி தூதர் உயிரிழந்தார்.

மாலி நாட்டின் வடக்கு பகுதியை ஜிகாதி எனப்படும் போராளி குழுக்கள் கடந்த 2012-ம் ஆண்டு தங்கள் கைவசம் கொண்டு வந்தன.  அவர்களை பிரான்ஸ் தலைமையிலான ராணுவத்தினர் விரட்டியடித்தனர். ஆனாலும் மற்ற பகுதிகளில் அவர்கள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, அப்பகுதியில் அமைதி ஏற்படுத்தும் முயற்சியாக கடந்த 2013-ம் ஆண்டில் ஐ.நா.சபையின் பன்னோக்கு ஒருங்கிணைந்த நிலைப்படுத்துதல் இயக்கம் மாலி நாட்டில் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், மாலியின் வடகிழக்கில் அகுவெல்ஹோக் நகரில் அமைதி தூதர்கள் பாதுகாப்பிற்காக ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் சென்ற வாகனம் சாலையோரம் கிடந்த வெடிகுண்டு வெடித்ததில் சிக்கியது. இந்த குண்டு வெடிப்பில் ஐ.நா. சபையின் அமைதி தூதர் ஒருவர் பலியானார்.  மேலும் 4 பேர் காயமடைந்தனர். 
கடந்த ஜனவரியில் அகுவெல்ஹோக் நகரில் இதேபோல் ஜிகாதி குழுக்கள் நடத்திய தாக்குதலில் ஐ.நா. சபையின் அமைதி தூதர்கள் 11 பேர் கொல்லப்பட்டனர். இதுவரை ஐ.நா.வுக்கான அமைதி தூதர்களில் 200 பேர் பலியாகி உள்ளனர்.

பகிரவும்...