Main Menu

மருத்துவமனையில் நோயாளி உடை அணிந்து திருமணம் செய்து கொண்ட அமெரிக்க ஜோடி

அமெரிக்காவில் ஒரு இளம் ஜோடி, நோயாளிகள் அணியும் உடை அணிந்து மருத்துவமனையில் வைத்து திருமணம் செய்துகொண்ட சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மைக்கேல் தாம்சன் மற்றும் ஆலியா. இவர்கள் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்ய முடிவு செய்தார்கள். ஆனால் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இருவர் காலமானதால், திருமணம் தள்ளி வைக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 21ம் தேதி திருமணம் செய்துகொள்ள இருவரும் முடிவு செய்தனர். ஆனால் அதிலும் அவர்களுக்கு பெரும் சோதனை காத்திருந்தது. திருமணத்திற்கு சிறிது நாட்களுக்கு முன்பு மணமகன் மைக்கேலின் தந்தை வில்லியம் அறுவை சிகிச்சைக்காக சன்னிவேல் நகரில் உள்ள பெய்லர் ஸ்காட் அண்ட் ஒயிட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திருமண நாளிற்கு முன்பு வில்லியம் குணமடைய வாய்ப்பில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவமனையின் அனுமதி பெற்று, பாதிரியாரை மருத்துவமனைக்கு அழைத்து தனது தந்தை முன்னிலையில் மைக்கேல் திருமணம் செய்துகொண்டார். அந்நிகழ்ச்சியின் போது மணமக்கள் மற்றும் பாதிரியார் ஆகியோர் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் உடை (கவுன்) அணிந்திருந்தனர்.
திருமணம் முடிந்ததும், புதுமணத் தம்பதியருக்கு அங்குள்ள செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து தேவாலயத்திற்கு சென்று நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் மீண்டும் திருமண சடங்குகளை செய்தனர்.

ஆலியா மற்றும் தாம்சன்

இது குறித்து ஆலியா கூறுகையில், ‘நாங்கள் மார்ச் மாதத்தில் திருமணம் செய்து கொள்ளவிருந்தோம், ஆனால் இரண்டு குடும்ப உறுப்பினர்கள் காலமானார்கள், அது எல்லாவற்றையும் மாற்றியது. எனவே திருமண ஏற்பாடுகளை ரத்து செய்தோம். குடும்பத்தில் இரண்டு முக்கிய உறுப்பினர்கள் இழப்பிற்கு பிறகு மைக்கேலின் அப்பா திருமணத்தில் இருக்க வேண்டியது மிக முக்கியமானது என நினைத்தோம். எனவே நாங்கள் எங்கு திருமணம் செய்தாலும் பரவாயில்லை. அவருடைய அப்பா அங்கு இருப்பது முக்கியமானது எனக் கருதி இந்த முடிவை எடுத்தோம்’, என தெரிவித்தார். 

பகிரவும்...