Main Menu

மனுக்களை மீளப்பெற்றால் திலீபனை நினைவுகூரலாம் – சி.வி.கே. சிவஞானம்

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீளப்பெறப்பட்டால் தமிழ் மக்களால் திலீபனின் நினைவேந்தலை நினைவுகூர முடியுமென வட.மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கமானது, பொதுவான அரசியல் தீர்மானமொன்றை எடுத்து பொலிஸாரின் மூலம் இந்த மனுக்களை நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இது எந்தவிதத்திலும், நீதிமன்ற விடயத்தில் ஜனாதிபதி தலையிடுவதாக கருத முடியாதெனவும் கூறினார்.

குறித்த சந்திப்பில் திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிப்பதற்கு, நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை நீக்கக் கோரி, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தமிழ்க் கட்சிகளால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் குறித்து அவர் இதன்போது கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...