Main Menu

மத நிகழ்ச்சியில் கடும் நெரிசல்- 44 பேர் பலியான சோகம்

பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் நெரிசல் ஏற்பட்டதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதிடெல் அவிவ்: 
இஸ்ரேல் நாட்டின் மவுண்ட் மெரான் பகுதியில் நேற்று இரவு யூதர்களின் பாரம்பரிய மத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் ஆடல், பாடல் என விழா களைகட்டியது.
அப்போது, நிகழ்ச்சியில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது. ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். சிலர் தடுப்புக்காக அமைக்கப்பட்டிருந்த ஷீட்களை பிரித்து, இடைப்பட்ட பகுதி வழியாக வெளியேற முயன்றதால் நெரிசல் மேலும் அதிகரித்தது. நெரிசலில் சிக்கி 44 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஏராளமான ஆம்புலன்ஸ்கள் அப்பகுதிக்கு விரைந்தன. காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

பகிரவும்...