Main Menu

மக்ரோனுக்கு ஆதரவளிக்கும் முன்னாள் ஜனாதிபதி François Hollande

முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து (François Hollande) இரண்டாம் சுற்று தேர்தலில் இம்மானுவல் மக்ரோனுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை இரவு TF1 தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த அவர், இதனை தெரிவித்தார். ‘இரண்டாம் சுற்று தேர்தலில் நான் மக்ரோனுக்கே வாக்களிப்பேன். Marine Le Pen எலிசே மாளிகைக்கு வந்தால் நாட்டில் மூன்று அடிப்படை சவால்கள் ஏற்படும். எங்கள் நன்மதிப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றுமை மற்றும் எங்களது கூட்டணி அமைப்புகளின் ஒற்றுமை அனைத்தும் சீர்கெடும்!’ என அவர் தெரிவித்தார்.

முன்னதாக, முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோஷியும் இம்மானுவல் மக்ரோனுக்கே தனது ஆதரவினைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

பகிரவும்...