Main Menu

மக்கள் 3 வாரங்களுக்கு வீட்டை விட்டு வர வேண்டாம் – துருக்கி அதிபர் வேண்டுகோள்

துருக்கியில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அதிபர் தாயிப் எர்டோகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மூன்று வாரங்களுக்கு அவசரத் தேவைகளுக்காக மட்டுமே வெளியே வருமாறு கோரிக்கை விடுத்துள்ள அவர், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கவும் அதன் தாக்கம் குறையவும் சமூக தொடர்புகளை குறைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.

துருக்கியில் ஒரே நாளில் 98 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில் நேற்று முதல் நபர் மரணம் அறிவிக்கப்பட்டது. இதனால் மக்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 20 நாடுகளுக்கு விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அலுவலகம் செல்வோர் நேராக வீட்டுக்கு செல்லுமாறும் துருக்கி அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பகிரவும்...