Main Menu

போலந்து ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஆண்ட்ரெஜ் டுடா மீண்டும் வெற்றி!

போலந்து ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் டுடா (Andrzej Duda) பெரும்பான்மை வாக்குகளுடன் மீண்டும் வெற்றிபெற்றுள்ளார்.

99 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளின் முடிவுகள், ஆண்ட்ரெஜ் டுடாவின் வெற்றியை உறுதிசெய்துள்ளது.

இதேவேளை, மீதமுள்ள கணக்கிடப்படாத வாக்குகள் இறுதி முடிவைத் தடுக்க வாய்ப்பில்லை என்று தேசிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய முடிவுகளின்படி, டுடா 51.21 சதவீத வாக்குகளையும், எதிர்க்கட்சி வேட்பாளர் வார்சாவின் லிபரல் மேயரான ரஃபால் ட்ராஸ்கோவ்ஸ்கி 48.79 சதவீத வாக்குகளையும் பெற்றனர். வேட்பாளர்களுக்கு இடையிலான வாக்குகளின் வேறுபாடு சுமார் 500,000 ஆகும்.

முதல் கட்டத் தேர்தலில் யாருக்கும் 50 சதவீதத்துக்கும் மேலான வாக்குகள் கிடைக்காததால், இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

பகிரவும்...