Main Menu

போலந்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் தொற்று!

போலந்தின் அப்பர் சிலேசியா பிராந்தியத்தில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில், அதிகமான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தெற்கு போலந்தில் உள்ள சோபியோவ்கா கொலையரியில் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடையே அதிகமான பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் இந்த தகவல் வெளிவந்துள்ளது.

வார இறுதியில் தேசிய அளவில் 1,151 புதிய கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு நிலக்கரி சுரங்க தொழிலாளர்களுடன் தொடர்புடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஞாயிற்றுக்கிழமை போலந்தை விட குறைவான புதிய வைரஸ் தொற்றுகளையே பதிவு செய்தன.

அப்பர் சிலேசியா என்பது போலந்தின் தொழில்துறை மையப்பகுதியாகும். இது ஒரு டசனுக்கும் அதிகமான சுரங்கங்களைக் கொண்டுள்ளது. அங்கு தொழிலாளர்கள் ஈரப்பதமான சூழ்நிலைகளில் உழைக்கிறார்கள்.

இப்பகுதியில் 4,000 இற்க்கும் மேற்பட்ட மக்கள் வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை புதிய தொற்றுநோய்களில், 57 சதவீதம் அப்பர் சிலேசியாவில் பதிவாகியுள்ளன.

கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் போலந்து ஒரு கடுமையான முடக்கநிலை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால், மேற்கு ஐரோப்பாவில் காணப்பட்ட அதிக எண்ணிக்கையிலான இறப்புகளை போலந்து தவிர்த்தது.

போலந்தில், கொவிட்-19 வைரஸ் பரவியதிலிருந்து இதுவரை 1,161பேர் இறந்துள்ளனர். 26,780பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பகிரவும்...