Main Menu

போகம்பரை சிறைச்சாலையில் 7 கைதிகளுக்கு கொரோனா!

போகம்பரை சிறைச்சாலையில் 7 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக போகம்பரை சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள 7 கைதிகளும் வெலிக்கந்த கொவிட் 19 வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வெலிக்கடை சிறைச்சாலையில் 23 கைதிகளுக்கு கொரோனா  வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 22 பேர் பெண்கள் என சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

பகிரவும்...