Main Menu

பொருளாதார மறுசீரமைப்பு இல்லையெனில் நெருக்கடியிலிருந்து மீளமுடியாது – சிரேஷ்ட பொருளியலாளர்

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக உள்ள கொள்கைகளை மறுசீரமைக்க வேண்டும் என உலக வங்கியின் முன்னாள் சிரேஷ்ட பொருளியலாளர் சாந்த தேவராஜன் தெரிவித்துள்ளார்.

அதனை செய்யாமல் விட்டால் தற்போதைய நெருக்கடியிலிருந்து இலங்கையால் மீளமுடியாது என்றும் 5 வருடங்களின் பின்னர் மீண்டும் கடன்நெருக்கடி ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசிய உணவைப் பெற்றுவதற்குத் பலர் திணறிக்கொண்டிருக்கும் நிலையில் நாட்டில் செல்வந்தர்களுக்குத் தொடர்ந்து நிதியளிக்கப்படுவது வேதனையளிப்பதாக கூறியுள்ளார்.

இலங்கை மக்கள் கொண்டிருக்கும் இயலுமையை வலுவிழக்கச்செய்யாமல் கொள்கைகளை அரசாங்கம் உடனடியாக மறுசீரமைக்க வேண்டும் என சாந்த தேவராஜன் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...