பொதுத் தேர்தல் குறித்த கலந்துரையாடல் இன்று
பொதுத் தேர்தல் குறித்த அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறுகிறது.
மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் இந்த கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம், சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த மாதம் 30ஆம் திகதி மற்றும், இந்த மாதம் முதலாம் மற்றும் 4ஆம் திகதிகளில் அஞ்சல் மூல வாக்களிக்காதவர்களுக்கு நாளையும் நாளை மறுதினமும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பகிரவும்...