Main Menu

பொதுத்தேர்தல் முன்பை விட கடினமாகவும் அழுத்தமாகவும் இருக்கும் : கோர்பின்

டிசெம்பர் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான பிரசாரங்களை அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கவுள்ள நிலையில் இந்தத் தேர்தல் முன்னெப்போதையும் விட கடினமானதாகவும் அழுத்தமானதாகவும் இருக்குமென எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார்.

வரி மோசடி செய்பவர்கள், மோசமான முதலாளிகள், பெரியளவில் மாசுபடுத்துபவர்கள் மற்றும் மோசமான நில உரிமையாளர்களுக்கு உதவும் ஒரு ஊழல் முறையை எதிர்த்து தனது பிரசாரத்தை கோர்பின் ஆரம்பிக்கவுள்ளார்.

தொழிற்கட்சியின் தேர்தல் பிரசாரங்களை ஆரம்பிக்கும் வகையில் கோர்பின் ஆற்றியுள்ள உரையில்,

பொரிஸ் ஜோன்சனின் கொன்சர்வேற்றிவ் கட்சியினர் சலுகை பெற்ற சிலரைப் பாதுகாக்கிறார்கள். அவர்கள் பணக்காரர்களுக்கான வரிகளைக் குறைத்துள்ளனர்.

இந்தத் தேர்தல் நம் நாட்டை மாற்றியமைப்பதற்கும், மக்களைத் தடுத்து நிறுத்தும் சொந்த நலன்களை ஒழிப்பதற்கும், எந்தவொரு சமூகமும் பின்வாங்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் கிடைத்துள்ள ஒரு வாய்ப்பாகும்.

எனவே இந்தத் தேர்தலில் அவர்கள் முன்னெப்போதையும் விட கடினமாகவும் போராடுவார்கள். அவர்கள் எல்லா விதங்களிலும் எங்களைத் தாக்குவார்கள் ஏனென்றால் நாங்கள் அவர்களை எதிர்க்கப் பயப்படவில்லை என்று அவர்களுக்குத் தெரியும் என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் ஒக்ரோபர் 31 க்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறத் தவறியதற்காக கோர்பினை தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டுவதன் மூலம் தனது கட்சியின் பிரசாரத்தை பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஆரம்பிக்கவுள்ளார்.

பகிரவும்...