Main Menu

பைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது: பிரித்தானிய ஆய்வில் தகவல்!

பைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது என்று பிரித்தானியா நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேம்பிரிட்ஜ் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எங்களுடைய சுகாதார பணியாளர்களுக்கு பைஃஸர் மருந்தின் ஒரு டோஸை செலுத்தும்போது அது கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கின்றது. அறிகுறிகளற்ற நோய் பரவலையும் தடுக்கின்றது என்பதை கண்டறிந்துள்ளோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இஸ்ரேலில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் உலக நாடுகளின் பல தரவுகள் ஆராயப்பட்டதன் முடிவில், அனைத்து தரப்பு வயதினருக்கும் பைஃஸர் கொரோனா தடுப்பு மருந்து சிறந்த பலனை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

10 இலட்சத்துக்கும் அதிகமான மக்களிடம் ஜர்னல் ஆஃப் மெடிசின் நடத்திய மருத்துவ பரிசோதனையிலும் பைஃஸர் கொரோனா தடுப்பு மருந்து சிறந்த பலனை அளிப்பதாக கூறப்பட்டுள்ளது.

பகிரவும்...