Main Menu

பெல்ஜியத்தின் இடம்பெற்ற விபத்தில் கார்பந்தய வீரர் மரணம்

பெல்ஜியம் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில் பங்கேற்றிருந்த போர்முலா 2 கார்ப்பந்தய வீரர் அந்தோன் ஹூபேர்ட் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

பிரான்ஸைச் சேர்ந்தவரான 22 வயதுடைய ஹூபேர்ட் நேற்று (சனிக்கிழமை) போட்டியில் பங்கேற்றிருந்த போது எதிர்பாராதவிதமாக அவரது கார் விபத்தில் சிக்கியது.

இதன்போது, காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஹூபேர்ட் மீது, ஓடுதளத்தில் பின்னால் வந்த அமெரிக்க வீரர் ஜூவான் மனுவல் கொர்ரியேயின் கார் ஏறியது.

விபத்துக்குள்ளான இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனளிக்காமல் ஹூபேர்ட் உயிரிழந்தார்.

கொரிரியேயின் உயிருக்கு ஆபத்தில்லை என வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஓடுதளத்தில் இவ்வாறான விபத்துக்கள் இடம்பெறுகின்ற போதும், விபத்தின் பாரதூரத்தன்மையை உணர்ந்து போட்டி நிறுத்தப்பட்டது.

இதேவேளை, இன்று இடம்பெறவிருந்த பந்தயமும், ஹூபேர்ட்டுக்கு மதிப்பளிக்கும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லீவிஸ் கமில்டன், மார்க் வெஸ்டபென் உள்ளிட்ட முன்னணி கார்பந்தய வீரர்கள் அந்தோன் ஹூபேர்டின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து வருகின்றனர்.

பகிரவும்...