Main Menu

அமேசன் காட்டுத் தீயினால் சிறுவர்களுக்கு பாதிப்பு!- உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

அமேசன் காட்டுத் தீயினால் குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு உள்ளிட்ட சுகாதாரக் கேடுகள் அதிகம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதென உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த பகுதிக்கு அருகில் காணப்படுகின்ற சுகாதார பராமரிப்பு நிலையங்களில் சேகரிகப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே இந்த கருத்தை அந்நிலையம் வெளியிட்டுள்ளது.

மேலும் சுகாதாரப் பிரச்சினைகளால்  ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக  சிரமம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை கடுமையான தீயால் பாதிக்கப்பட்ட இடங்களில் மாசு கலந்த காற்று நீண்டகாலம் இருக்கும் என்றும் ஆனால் தீயால் நீண்டகால சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியம் குறைவு என்றும் சூழல்வியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பகிரவும்...