புவிவட்டப்பாதையை அடையாத ஸ்டார்லைனர் விண்கலம் குறித்து ஆராய்ந்து வருவதாக போயிங் மற்றும் நாசா தகவல்
ஸ்டார்லைனர் விண்கலம் நிர்ணயிக்கப்பட்ட புவிவட்டப்பாதையை அடையாததற்கான காரணங்கள் குறித்து நாசாவும், போயிங் நிறுவனமும் ஆராய்ந்து வருகின்றன.
சர்வதேச விண்வெளி மையத்திற்கு பயணிக்கும் விண்வெளி வீரர்களுக்கான விண்கலங்களை தயாரிப்பதற்காக போயிங் நிறுவனத்துடன் நாசா ஒப்பந்தம் செய்துள்ளது.
அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ள அந்நிறுவனம், அதன் ஒரு பகுதியாக தயாரிக்கப்பட்ட ஸ்டார்லைனர் விண்கலத்தை கடந்த வெள்ளிக்கிழமை விண்ணில் செலுத்தி பரிசோதித்தது.
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தாலும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிர்ணயிக்கப்பட்ட புவிவட்டப்பாதையை அடைய முடியாமல் போனதால், விண்கலத்தை சர்வதேச விண்வெளி மையத்துடன் இணைக்கும் முயற்சி நிறைவேறவில்லை.
ஆனாலும் மற்றொரு புவிவட்டப்பாதையில் பத்திரமாக உள்ள விண்கலமானது மெக்சிகோவில் தரையிறங்கும் என தெரிவித்துள்ள போயிங் நிறுவனம், இலக்கை எட்ட முடியாததற்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.
பகிரவும்...