Main Menu

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயால் பல வீடுகள் தீக்கிரை – சுற்றுலா சென்ற பிரதமர் மன்னிப்பு கோரினார்

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ பற்றி எரிந்து வரும் நிலையில் விடுமுறையைக் கழிக்க ஹவாய் தீவு சென்றது குறித்து ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மாரிசன் மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

நியூசவுத் வேல்ஸ், விக்டோரியா உள்ளிட்ட 3 மாநிலங்களில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் பற்றியெரியும் காட்டுத் தீயில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களும் நூற்றுக்கணக்கான வீடுகளும் எரிந்து சாம்பலாகியுள்ளன. 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

3 ஆயிரத்துக்கு மேற்பட்ட தீயணைப்புத்துறையினரும் மீட்புக் குழுவினரும் தீயணைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மாரிசன் ஹவாய் தீவில் குடும்பத்தினருடன் விடுமுறையை கழிக்கச் சென்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து பாதியிலேயே தாயகம் திரும்பிய அவர் மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

பகிரவும்...