Main Menu

புதிய பிரதமர்: கருத்துக் கணிப்பில் லிஸ் ட்ரஸ்க்கு அதிக ஆதரவு!

பிரித்தானியாவில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் நடைபெறும் போட்டி தொடர்பாக நடைபெற்ற கருத்துக் கணிப்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ்ஸுக்கு அதிக வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

730 கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களிடையே ‘யுகவ்’ ஆய்வு அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில் லிஸ் ட்ரஸ்ஸுக்கு 62 சதவீதத்தினரும் ரிஷி சுனக்குக்கு 38 சதவீதத்தினரும் ஆதரவு தெரிவித்தனர்.

பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் பதவி விலகியதைத் தொடர்;ந்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியில் பிரதமர் பதவிக்கான போட்டியில் 2க்கும் அதிகமான வேட்பாளர்கள் களமிறங்கினர்.

2க்கும் அதிகமான வேட்பாளர்கள் களம் இறங்கியதால் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில் முதல் கட்ட தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு சுற்றுகளாக வாக்களித்து போட்டியிட்ட 8 பேரில் 2 பேரை இறுதி வேட்பாளர்களாக தேர்வு செய்தனர்.

இதன்படி முன்னாள் திறைசேரியின் தலைவர் ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ் ஆகிய இருவரும் இறுதி வேட்பாளர்களாக தேர்வாகியுள்ளனர்.

இவர்கள் இருவரில் ஒருவரை கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் கன்சர்வேட்டிவ் கட்சியின் சுமார் 2 இலட்சம் உறுப்பினர்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள். அதற்கான தேர்தல் ஒகஸ்ட் 4ஆம் திகதி முதல் செப்டம்பர் முதல் வாரம் வரை நடைபெறுகின்றது.

கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே நடந்த முதல் கட்ட தேர்தலில் அனைத்து சுற்றுகளிலும் ரிஷி சுனக் முதல் இடத்தை பிடித்ததால் அவர் பிரதமராக தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போதைய நிலவரத்தின்படி கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களிடையே ரிஷி சுனக்கை காட்டிலும், லிஸ் ட்ரஸ்சுக்கே அதிக ஆதரவு உள்ளது.

பகிரவும்...