Main Menu

பீகாரில் மர்ம நோய்: ஒரே நாளில் 6 குழந்தைகள் உயிரிழப்பு

பீகாரில் மர்ம நோயால் தாக்கப்பட்டு ஒரே நாளில் 6 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார்- முசாபர்பூர் மாவட்டத்தில் கடந்த மாதம் மூளைக்காய்ச்சல் தாக்கியதில், ஏறத்தாழ 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர்.

குறித்த தாக்கத்திலிருந்து அம்மாநில நிர்வாகம் மீள்வதற்குள்  கயாவிலுள்ள  அனுராக் நாராயண் மகத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டிருந்த 22குழந்தைகள் அனுமதிக்கப்பட்டனர்.

குறித்த குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் 6 குழந்தைகள்  அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.

அதனைத் தொடரந்து பாட்னாவிலிருந்து விஷேட மருத்துவக் குழுவினர் கயாவிற்கு  வருகை தந்துள்ளனர்.

மேலும் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்குமாறு பீகார் அரசு உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...