Main Menu

பிரேசில் அதிபர் போல்சனா ரோவுக்கு எதிராக மக்கள் போராட்டம்

கொரோனா தடுப்பு பணியை முறையாக மேற்கொள்ள தவறியதாக பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர்.

உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் நாட்டில் தான் அதிகளவிலான மக்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். தகவலின்படி 4.61 லட்சம் பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், பிரேசில் நாட்டில் கொரோனா தடுப்பு பணியை முறையாக மேற்கொள்ள தவறியதாகச் சொல்லி அந்த நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ரியோ டி ஜெனீரோ உட்பட பல்வேறு நகரங்களில் திரண்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சிலர் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ பதவி விலக வேண்டுமென்ற கோஷத்தையும் எழுப்பினர். சிலர் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவை ஒரு இனப்படுகொலையாளர் எனவும் கூறினர்.

மேலும், ஆரம்பத்திலிருந்தே அதிபர் தொற்று பரவலை தடுப்பதில் மெத்தனமாக செயல்பட்டதாகவும் மக்கள் குற்றம்சாட்டினர்.

பகிரவும்...