Main Menu

பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகள் வீழ்ச்சியடைந்தால் இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்: ஹிலாரி பென்

அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகள் வீழ்ச்சியடைந்தால் இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கான வாய்ப்புகள் அதிகரிக்குமென பாராளுமன்றத்தின் பிரெக்ஸிற் குழு தலைவரான ஹிலாரி பென் தெரிவித்துள்ளார்.

பிபிசி வானொலிசேவைக்கு வழங்கிய பேட்டியொன்றில் ஹிலாரி பென் கூறியதாவது;

பிரெக்ஸிற் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு பிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கு பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்குவது, பிரெக்ஸிற் மீதான இரண்டாவது மக்கள் வாக்கெடுப்பது நடத்தப்படுவது ஆகிய இரு வழிகளே உள்ளன.

பிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

உடன்படிக்கை எதுவும் எட்டப்படாத நிலையில் ஆளுங்கட்சிக்கு எதிர்க்கட்சிக்கும் இடையிலான பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு கொண்டுவரப்படுவதாக அறிவிக்கபப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...