Main Menu

பிரெக்ஸிற் ஒப்பந்தம் மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்படாது – டொனால்ட் ரஸ்க்

பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே-க்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் ஒப்புக்கொள்ளப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தம் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்படாது என ஐரோப்பிய ஆணையத் தலைவர் டொனால்ட் ரஸ்க் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தெரேசா மே கொன்சர்வேற்றிவ் கட்சி தலைவர் பதவியிலிருந்து கடந்த ஏழாம் திகதி விலகியதைத் தொடர்ந்து இப்பதவிக்கான போட்டி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தெரேசா மே-யினால் ஒப்புக்கொள்ளப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தவுள்ளதாக இப்போட்டியின் போட்டியாளர்களான பொரிஸ் ஜோன்சன் மற்றும் ஜெரமி ஹண்ட் ஆகியோர் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் புதிய பிரதமருடன் மீண்டும் பிரெக்ஸிற் ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படாது எனவும் அரசியல் பிரகடனத்தில் மாத்திரமே மாற்றங்களை ஏற்படுத்த முடியுமெனவும் ரஸ்க் தெரிவித்துள்ளார்.

ஒழுங்கற்ற பிரெக்ஸிற்றை தவிர்ப்பதற்கும், பிரித்தானியாவுடன் முடிந்தவரை நெருக்கமான எதிர்கால உறவை ஏற்படுத்துவதற்காகவும் அரசியல் பிரகடனம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளதாக ரஸ்க் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...