Main Menu

பிரித்தானிய பிரதமர் பதவிக்காக கடும் போட்டி

பிரித்தானிய பிரதமர் பதவிக்காக போட்டியிடுபர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.

தெரேசா மேயினால் முன்னெடுக்கப்பட்ட பிரெக்சிட் ஒப்பந்தம் மூன்றாம் முறையும் தோல்வியடைந்த நிலையில், அவர் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து எதிர்வரும் ஜூன் மாதம் 7 ஆம் திகதி விலகவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கட்சியின் தலைமை பதவிக்காக போட்டியிட உள்ளதாக முன்னாள் அமைச்சரவை உறுப்பினர்களான டொமினிக்  மற்றும் எண்ட்ரியா லீட்சம் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் டொமினிக் ராப் ஊடகம் ஒன்றிற்கு அளித்த செவ்வியில், ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கு முன்னர் பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து முற்றாக வெளியேற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அதே கருத்தை முன்னாள் அமைச்சரான அன்ரிஸ் லீட்சம்மும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே வெளிவிவகார செயலாளர் ஜெரிமி ஹண்ட், சர்வதேச அபிவிருத்தித்துறை செயலாளர் ரோரி ஸ்ரூவேட், சுகாதார துறை செயலாளர் மற் ஹான்கொக், முன்னாள் வெளிவிவகார செயலாளர் பொரிஸ் ஜோன்சன் மற்றும் ஓய்வுதியத்துறை செயலாளர் எஸ்தர் மெக்வே ஆகிய 5 பேரும் கன்சர்வேரிவ் கட்சியின் தலைமை பதவிக்காக போட்டியிடவுள்ளதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...