Main Menu

மே 8, 1945 – இரண்டாம் உலகப் போரின் நிறைவு நாள்

இன்று வெள்ளிக்கிழமை, மே 8, 2020, பொது விடுமுறை, இரண்டாம் உலகப் போரின் வெற்றியின் 75 வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறோம். ஒவ்வொரு ஆண்டும், பாரிஸிலும், பிரான்சின் அனைத்து நகரங்களிலும், மாலை அணிவித்தல் மற்றும் இசைக்குழுக்களுடன் ஒரு பெரிய நினைவு விழா நடைபெறும், முதல் முறையாக, கொரோனா வைரஸ் காரணமாக விழாக்கள் நடாத்தப்படவில்லை,

குடியரசுத் தலைவர் தலைமையில் நடைபெறும் பாரம்பரிய தேசிய விழா, பாரிஸில் இன்று காலை 10.45 மணியளவில் Arc De Triompheல் நடைபெறும், என அறிவிக்கப்பட்டது

ஆனால் தடைசெய்யப்பட்ட வடிவத்தில் மற்றும் பார்வையாளர்கள் இல்லாமல் இம்மானுவேல் மக்ரோனின் முன்னிலையில், பிரதமர் எட்வார்ட் பிலிப், அமைச்சரும் ஆயுதப்படைகளுக்கான மாநில செயலாளரும், பாரிஸ் முதல்வரும் இராணுவ அதிகாரிகளுடனும் இடம் பெறும்

மே 8, 2020 இன் தேசிய நினைவு நாள் “தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும்” என்று இராணுவத்துறை அமைச்சரின் வெளியுறவுத்துறை செயலர் Geneviève Darrieussecq ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.

இந்த தேசிய நாளில் பங்கேற்க விரும்புவோரை குடியரசின் ஜனாதிபதி பிரான்சின் வண்ணங்களை தங்கள் பால்கனியில் அல்லது ஜன்னலில் பறக்க விடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

பகிரவும்...