Main Menu

பிரான்ஸில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 29,142 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உலகின் ஐந்தாவது மிக உயர்ந்த உயிரிழப்புக்கள் பதிவாகிய பிரான்ஸில் இறப்பு எண்ணிக்கை சனிக்கிழமையன்று குறைவாக பதிவாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில் தீவிர சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாகவும் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, கொரோனா வைரஸினால் இறப்பவர்களின் எண்ணிக்கை முந்தைய நாளிலிருந்து 31 அல்லது 0.1% அதிகரித்து 29 ஆயிரத்து 142 ஆக உயர்ந்துள்ளது.

இது இறப்புகளுடன் ஒப்பிடும்போது, 46 அல்லது 0.2% உயர்வு என்று வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. அந்தவகையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 579 அதிகரித்து 1 இலட்சத்து 53 ஆயிரத்து 634 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 479 ஆக குறைந்துள்ளது.

பகிரவும்...