Main Menu

பிரான்ஸில் பிரித்தானிய மாறுபாடு வைரஸ் தீவிரம் அடைந்துள்ளது: சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

பிரான்ஸில் பிரித்தானிய மாறுபாடு வைரஸ் மிக தீவிரமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் ஒலிவர் வாரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘பிரான்ஸில் பிரித்தானிய பிரிவு வைரஸ் 64 சதவீதமாக உள்ளது. இதனால், அடுத்து வரும் வாரங்களில் மிக இறுக்கமான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும் என கூறினார்.

பிரான்ஸில் கடந்த 27ஆம் திகதி டிசம்பர் 2020ஆம் ஆண்டிலிருந்து, நேற்று (வியாழக்கிழமை) வரை 4.337.343 பேரிற்குத் தடுப்பூசிகள்
போடப்பட்டுள்ளதாக சுகாதாரப் பொதுத் தலைமையகம் அறிவித்துள்ளது.

இதுவரை 4.164.418பேர் முதல் அலகு தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். 2.032.791பேர் மட்டுமே இரண்டாவது அலகு தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

பிரான்ஸின் சனத் தொகையில் 6.47 சதவீத பேரிற்கு ஆகக் குறைந்தது முதல் அலகு தடுப்பூசிகளாவது போடப்பட்டுள்ளளன. 3.12 சதவீத பேரிற்கு இரண்டாவது அலகு தடுப்பு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

பிரான்சின் தடுப்பூசி மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் 919.224 கொரோனத் தடுப்பூசி அலகுகள் மட்டுமே சேமிப்பில் உள்ளன.

பகிரவும்...