Main Menu

பிரான்ஸில், ட்ரம்ப் குறித்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானது!

பிரான்ஸில் நால்வரில் மூவர் அமெரிக்க ஜனாதிபதி குறித்து மோசமான கருத்துக்களை கொண்டிருக்கின்றார்கள் என்பது தெரியவந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறித்து பிரான்ஸ் மக்களிடம் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் ஊடாகவே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதில் நால்வரில் மூவர், அமெரிக்க ஜனாதிபதி குறித்து மோசமான கருத்து கொண்டிருக்கின்றார்கள் என்பது தெரியவந்துள்ளது. அதாவது 75 வீதமான மக்கள் மோசமான கருத்தினை கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதே கருத்துக்கணிப்பில் மேலும் சில நாட்டுத்தலைவர்கள் குறித்த நன்மதிப்பு தொடர்பாகவும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

இதில் ரஷ்ய ஜனாதிபதி குறித்து 63 வீத மோசமான கருத்தினையும், இத்தாலி ஜனாதிபதி Matteo Salvini குறித்து 59 வீத மோசமான கருத்தினையும், ஹங்கேரிய ஜனாதிபதி Viktor Orban குறித்து 40 வீத மோசமான கருத்தினையும் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பகிரவும்...