Main Menu

பிரான்ஸில் கொரோனா தாக்கத்துக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 191ஆக அதிகரிப்பு!

பிரான்ஸில் கொரோனா தாக்கத்துக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 191ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார இயக்குனரக ஜெனரல் ஜெரோம் சாலமன் அறிவித்துள்ளார்.

ஒரே நாளில் நாடு முழுவதும் 61 கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், கொரோனா வைரஸால் 12 மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 12 மாகாணங்களில் ஐந்து மாகாணங்களில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஐரோப்பாவை பொறுத்தவரை, இத்தாலிக்குப் பின் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக பிரான்ஸ் உள்ளமை குறிப்பிடத்தக்கது

இதற்கிடையில், கொரோனா வைரஸ் தாக்கம் பிரான்ஸில் அதிகரித்துள்ள நிலையில், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தனது சுற்றுப்பயணங்களை இரத்துச் செய்துள்ளார்.

பகிரவும்...