Main Menu

பிரான்ஸில் கட்டுப்பாடுகள் தளர்தப்பட்ட ஒரு வாரத்திற்குள் புதிதாக 25 இடங்களில் கொவிட்-19 தொற்று!

பிரான்ஸில் முடக்கநிலையில் சில கட்டுப்பாடுகள் தளர்தப்பட்ட ஒரு வாரத்திற்குள், புதிதாக 25 இடங்களில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, பிரான்ஸின் சுகாதாரம் மற்றும் ஒருமைப்பாட்டிற்கான அமைச்சர் ஒலிவியே வெரோன் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதத்திலிருந்து கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, பிரான்ஸ் முடக்கப்பட்டு, கடந்த 11ஆம் திகதி சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

முடக்கநிலை தளர்த்தப்பட்ட முதல்நாளே உயிரிழப்பு எண்ணிக்கை மீண்டும் உச்சத்தை தொட்டதோடு, பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்தது.
இந்தநிலையில், புதிதாக நிறுவனங்கள், பொது மையங்கள் என 25 இடங்களில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் ஒலிவியே வெரோன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நாங்கள் கொரோனாத் தொற்று சங்கிலியை உடைக்க முயல்கின்றோம். தற்போது எம்மால் ஒரு நாளைக்கு 50.000 கொரோனாப் பரிசோதனைகளைச் செய்ய முடிகின்றது’ என கூறினார்.

இந்த கொரோனாத் தொற்றுக்களின், மூன்று முக்கிய மையங்கள் இல்-து-பிரான்ஸில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மற்றையவை பிரான்ஸின் பல பாகங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டள்ளன. இதில் பல இறைச்சி தயாரிக்கும் பெரிய பண்ணை நிறுவனங்களில் தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

ஆரம்பத்தில் முடக்கநிலைக்குப் பின்னர் எம்மால் வாரத்திற்கு 700.000 சோதனைகள் செய்யமுடியும் என்று கூறிய அரசு அதன் பாதியளவைத்தான் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...