Main Menu

பிரான்ஸில் உள்ளிருப்புக் கட்டுப்பாடு நீக்கப்பட்டு 15ஆம் திகதி முதல் ஊரடங்கு அமுல்!

பிரான்ஸில் உள்ளிருப்புக் கட்டுப்பாடு நீக்கப்பட்டு, எதிர்வரும் 15ஆம் திகதி முதல் ஊரடங்கு அமுலாக உள்ளதாகப் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் அறிவித்துள்ளார்.

பிரான்ஸ் கலாச்சார இடங்களை மீண்டும் திறப்பதை தாமதப்படுத்தும் மற்றும் இரவு நேர ஊரடங்கு உத்தரவை அறிமுகப்படுத்தும்.

ஒக்டோபர் பிற்பகுதியில் முடக்கநிலை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பின்னர் அரசாங்கம் எதிர்பார்த்த அளவுக்கு தொற்று வீதங்கள் வேகமாக வீழ்ச்சியடையவில்லை என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சர், உட்துறை அமைச்சர் ஆகியோரின் ஊடக அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள முக்கிய விபரங்களை பார்க்கலாம்.

எதிர்வரும் 15ஆம் திகதி முதல் உள்ளிருப்பு முடிவிற்கு வருகின்றது. அத்துடன் உள்ளிருப்பு அத்தாட்சிப் பத்திரங்கள் முடிவிற்கு வருகின்றது.
ஆனால், எட்டு மணியிலிருந்து காலை 6 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படும்.

பிராந்தியங்களிற்கு இடையில், மாகாணங்களிற்கு இடையில் செல்வதற்கான அனுமதி. ஆனாலும் ஊரடங்கு நேரத்தில் பிராந்தியங்களிற்கு இடையில் செல்வதற்கான காரணம் குறிப்பிடப்படல் வேண்டும்.

இதேவேளை எதிர்வரும் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிக்கும் இடையிலான கிறிஸ்மஸ் இரவில் ஊரடங்கு தளர்த்தப்படும்.

ஆனாலும், விடுகளில் ஆறு பெரியவர்களிற்கு அதிகமாகக் கூட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளை கணக்கெடுக்கத் தேவையில்லை.

ஜனவரி 7ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்திருந்தால், திரையரங்குகள், நாடகம் மற்றும் நிகழ்ச்சி மண்டபங்கள், அருங்காட்சியகங்கள், விளையாட்டு மையங்கள் திறக்கப்படலாம்.

இதேபோல ஜனவரி 20ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்திருந்தால், உணவகங்கள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் திறக்கப்படலாம்.

லிசேக்களில் அனைத்து மாணவ மாணவிகளிற்கும் ஒரே நேரத்தில் மீண்டும் வகுப்புகள் நடாத்தப்படலாம்.

பகிரவும்...