Main Menu

பிரான்சில் மீண்டும் நாடு தழுவிய மாபெரும் போராட்டம்: தொழிற்சங்கங்கள் அழைப்பு

பிரான்சில் பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து மீண்டும் நாடு தழுவிய மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளன.

வரும் ஜனவரி 9ஆம் திகதி (வியாழக்கிழமை) மற்றும் 11 ஆம் திகதி (சனிக்கிழமை) ஆகிய இரு தினங்களில் அரசாங்கத்தின் ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு எதிராக  நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களுக்கு பிரான்ஸ் தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

ஓய்வூதிய சீர்திருத்தங்கள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து CGT, FO, Solidaires மற்றும் FSU ஆகிய நான்கு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தொடர் போராட்டம் நேற்றுடன் (சனிக்கிழமை) 30ஆவது நாளை எட்டிய நிலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நேற்று பரிசில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

Gare de Lyon நிலையத்தில் ஆரம்பித்த இந்த ஆர்ப்பாட்டப் பேரணி, அங்கிருந்து Gare de l’Est நிலையம் வரை சென்றதுடன் தொழிலாளர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தமது கோரிக்கைகள் தொடர்பாக உரிய தீர்மானத்தை முன்னெடுக்கும் வரை போராட்டம் தொடரும் என எச்சரித்துள்ள போராட்டக்காரர்கள், இந்த மாதமும் நாடாளாவிய ரீதியில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்

பகிரவும்...