Main Menu

அவுஸ்ரேலியா தீ: வலுவான காற்றினால் மீட்புப்பணிகளுக்கு பெரும் இடையூறு!

அவுஸ்ரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக 100 க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.

இந்நிலையில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் எடுத்துள்ள முயற்சிக்கு வலுவான காற்று பெரும் தடையாக காணப்படுகின்றது.

அந்தவகையில் சுமார் 120 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதாகவும் இது தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகளுக்கு பெரும் இடையூறாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அண்டை மாநிலமான விக்டோரியாவில், தீயில் சிக்கிய மக்களை வெளியேற்ற இராணுவ ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடந்த செப்டெம்பர் மாதம் முதல் அவுஸ்ரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 2 இலட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீயில் கருகி நாசமாகியுள்ளதுடன் 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 1,200 க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் இதற்கிடையே, நியூ சவுத்வேல்ஸ் பகுதியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதுடன் காட்டுத்தீ பரவியுள்ள பிராந்தியங்களிலிருந்து வௌியேறுமாறு பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

அவசரகால பிரகடனத்தினால் பெரிதும் விமர்சனங்கள் உருவாகியிருந்தபோதும், இந்த நிலமையை கட்டுக்குள் கொண்டவர 3,000 மேற்பட்ட படையினரை சேவையில் ஈடுபடுத்த பிரதமர் ஸ்கொட் மொரிசன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

பகிரவும்...