Main Menu

பிரான்சில் புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்வு

பிரான்சில் புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டில் 131,000 அகதிகள் புகலிடக் கோரிக்கைக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டுடன் (2021) ஒப்பிடுகையில் 27 சதவீதம் அதிகமாகும். 2021 ஆம் ஆண்டில் 104,577 பேர் புகலிடக் கோரிக்கைக்கு விண்ணப்பித்திருந்தார்கள்.

அதேவேளை, சென்ற ஆண்டில் புகலிடக் கோரியவர்களில் 17,000 அகதிகள் ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்களாவர்.

அதன் பின்னர் பங்களாதேஷ் (8,600 பேர்), துருக்கி (8,500 பேர்), ஜோர்ஜியா (8,100 பேர்) நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.

எவ்வாறாயினும் கடந்த 2019 ஆம் ஆண்டிலேயே பிரான்சில் அதிகளவு அகதிகள் புகலிடக் கோரிக்கையை விண்ணப்பித்திருந்தனர். அவ்வருடத்தில் மொத்தமாக 138,420 பேர் புகலிடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

பகிரவும்...