Main Menu

பிரான்சில் குழந்தைகளை தாக்கும் உயிராபத்தான மர்ம நோய்

பிரான்சில் சிறு பிள்ளைகளை மிக மோசமான அழற்சி நோய் (maladie inflammatoire grave) தாக்குவதாகவும், இது உயிராபத்தானதாக இருப்பதாகவும், சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன் தெரிவித்துள்ளார்.

இது கொரொனா வைரசின் தாக்குதலா என்ற ஆராய்ச்சி நடந்து வருவதாகவும், இதனை மிகவும் தீவிர விடயமாக எடுத்து ஆய்விற்குள்ளாக்கி உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“இதனை நான் மிகவும் தீவிர விடயமாக எடுத்துள்ளேன். இது வரைக்கும், எங்களிடம் மருத்துவ ரீதியான எந்த விளக்கங்களும் தரவுகளும் இல்லை. இது கொரொனா வைரசின் தாக்கமா, அல்லது வேறு ஏதும் தொற்றின் தாக்கமா என்பது அறியப்படல் வேண்டும். தற்போதைக்கு எங்களிடம் இதற்கான பதில் இல்லை” என ஒலிவியே வெரோன் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை ஆரம்பிக்க தயார்படுத்தும் நிலையில், சிறு பிள்ளைகள் கொரொனா வைரஸ் தாக்கத்திற்கு உட்பட மாட்டார்கள் என்று அரசு தெரிவித்துள்ள நிலையில், தற்போது சிறு பிள்ளைகளையே கொரொனா தாக்குகின்றதா என்ற கேள்வி எழுந்திருப்பது ஆபத்தானது.

பகிரவும்...