Main Menu

பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி நன்றி தெரிவித்த சோனியா…

“கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை நாடு முழுவதும் அமல்படுத்தியதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் இந்த உத்தரவை நான் வரவேற்கிறேன். கொரோனா வைரஸை தடுக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை அளிக்கும்.”

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை நாடு முழுவதும் அமல்படுத்தியதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதம் எழுதியுள்ளார். அதில், “கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை நாடு முழுவதும் அமல்படுத்தியதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் இந்த உத்தரவை நான் வரவேற்கிறேன். கொரோனா வைரஸை தடுக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை அளிக்கும்.

கொரோனா வைரஸ் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே பெரிய பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. உயிரிழப்புகளையும் இந்நோய் ஏற்படுத்திவருகிறது. தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், ஏழைகள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். எனவே, வாழ்வாதாரத்தை இழந்து தவித்துவரும் ஏழை, எளிய மக்களுக்கு நிவாரண உதவிகளை அரசு அறிவிக்க வேண்டும். இந்த இக்கட்டாண நேரத்தில் கடன் வசூலிப்பு நடவடிக்கைகளை தற்காலிகமாக ஒத்தி வைக்க வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராடிவரும் மருத்துவர்களுக்கு வீட்டு உரிமையாளர்களால் தொல்லை ஏற்படுவதாகத் தகவல்கள் வருகின்றன. இந்த நெருக்கடியான நேரத்தில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதேவேளையில் நாட்டு மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, கொரோனா வைரசால் ஏற்பட்டு வரும் சவாலை முறியடிக்க தயாராகியுள்ளனர்.” என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

பகிரவும்...