Main Menu

பிரதமர் ஜோன்சனின் சகோதரர் பதவி விலகினார்!

வணிக அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளிலிருந்து விலகுவதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் இளைய சகோதரரான ஜோ ஜோன்சன் சற்றுமுன்னர் அறிவித்துள்ளார்.

குடும்ப விசுவாசத்திற்கும் தேசிய நலனுக்கும் இடையில் முரண்பட்டுள்ள காரணத்தால் பதவி விலகுவதாகவும் தனது பதவியில் தீர்க்கமுடியாத பதற்றம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு முதல் ஓர்ப்பிங்டன் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ள ஜோ ஜோன்சன் 10 ஆண்டுகளாக தனது தொகுதிகளுக்கு சேவை செய்தது பெருமைக்குரியது எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் தெரேசா மே பிரெக்ஸிற்றை கையாண்ட விதத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னதாகவும் ஜோ ஜோன்சன் அமைச்சர் பதவியிலிருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...