Main Menu

சிரியாவில் அதிகரிக்கும் உள்நாட்டு போர் – ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!

சிரியாவில் அதிகரிக்கும் உள்நாட்டு போர் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த நான்கு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட வான்தாக்குதலிலேயே இவ்வாறு ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜெனீவாவில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றிய போதே ஐ.நா மனித உரிமை அமைப்பின் தலைவர் இந்த தகவலினை வெளியிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘கடந்த ஏப்ரல் மாதம் முதல் சிரியாவின் வடக்குப் பகுதிகளில் வான்வழித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளான இட்லிப், ஹமாம் மோசமாக பாதிப்படைந்துள்ளன. இந்தத் தாக்குதல்களில் பொதுமக்கள் ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிரியாவில் அரச படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 8 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...