Main Menu

பின்லேடனை போன்று பாக்தாதி உடல், ஆழ்கடலில் வீச்சு

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவன் பாக்தாதியின் உடல், பின்லேடன் உடலைப் போன்று ஆழ்கடலில் வீசப்பட்டது.

ஐ.எஸ்.பயங்கரவாதிகளின் தலைவன் பக்தாதிவாஷிங்டன்:

உலகையே அச்சுறுத்தி வந்தவர், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் அபுபக்கர் அல் பாக்தாதி (வயது 48). இவரை கொல்வதற்கு நீண்ட காலமாகவே அமெரிக்கா குறி வைத்திருந்தது.

இந்த நிலையில்தான் அவர் சிரியாவின் வடமேற்கு நகரமான இத்லிப் நகருக்கு அருகே பாரிஷா என்ற கிராமத்தில் உள்ள ஒரு பெரிய வளாகத்தில் பதுங்கி இருப்பதை குர்துக்கள் அளித்த ரகசிய தகவல் மூலம் அமெரிக்கா அறிந்தது.

பாக்தாதி பதுங்கி இருந்த வளாகத்தை சுற்றி வளைத்தனர்.

அமெரிக்காவின் கையில் சிக்கித்தவிப்பதை விட தன்னைத்தானே பலியிடுவது மேல் என முடிவு செய்து தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை பாக்தாதி வெடிக்க வைத்தார்.

இதில் பாக்தாதியும், அவருடன் இருந்த 3 குழந்தைகளும் பலியாகினர். இதை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நிருபர்கள் மத்தியில் வெளியிட்டார்.

பாக்தாதியின் உடல் என்ன ஆனது என்ற கேள்வி எழுந்தது.

அவரது உடல் ஆழ்கடலில் எடுத்துச்செல்லப்பட்டு வீசப்பட்டு விட்டது. இதை அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகனில் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் உறுதி செய்தார்.

அல் கொய்தா இயக்க தலைவன் ஒசாமா பின்லேடனை, பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது 2011-ம் ஆண்டு அமெரிக்க சிறப்பு படை சுட்டுக்கொன்றது.

அப்போது அவரது உடலும் ஆழ்கடலுக்கு எடுத்துச்செல்லப்பட்டு வீசப்பட்டது.

அதே கதிதான், இப்போது பாக்தாதி உடலுக்கும் ஏற்பட்டுள்ளது.

பயங்கரவாத அமைப்பின் தலைவர்கள் உடல்களை புதைக்காமல் கடலில் வீசுவதையே அமெரிக்கா வழக்கமாக கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்தாதியின் வாழ்வுக்கு அமெரிக்கா முடிவுரை எழுதியதில் முக்கிய பங்கு வகித்தது, சிறப்பு படையின் வேட்டை நாய்தான். இந்த நாயை டிரம்ப் புகழ்ந்து தள்ளினார். ஆனால் அதன் பெயர்கூட ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

பாக்தாதி வேட்டையின்போது அந்த நாய் காயம் அடைந்து தற்போது சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பகிரவும்...