Main Menu

பிக் பேஷ்: பென் கட்டிங்கின் பொறுப்பான துடுப்பாட்டத்தால் பிரிஸ்பேன் அணி வெற்றி!

பிக் பேஷ் ரி-20 தொடரின் 29ஆவது லீக் போட்டியில், பிரிஸ்பேன் ஹீட் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

பிரிஸ்பேன் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், பிரிஸ்பேன் ஹீட் அணியும், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, மெத்தியு வேட் 61 ஓட்டங்களையும், தோமஸ் ரோஜர்ஸ் 17 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பிரிஸ்பேன் ஹீட் அணியின் பந்துவீச்சில், ஜோஷ் லோலர் 3 விக்கெட்டுகளையும், பென் லாஃப்லின் 2 விக்கெட்டுகளையும், மெட் ரென்ஷோவ், சஹீர்கான் மற்றும் பென் கட்டிங் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து, 127 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணி, ஓவர்கள் நிறைவில், விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் பிரிஸ்பேன் ஹீட் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, பென் கட்டிங் ஆட்டமிழக்காது 43 ஓட்டங்களையும், மெக்ஸ் பிரையன்ட் 28 ஓட்டங்களையும், ஜிம்மி பியர்சன் ஆட்டமிழக்காது 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியின் பந்துவீச்சில், ஸ்கொட் லோலண்ட் 3 விக்கெட்டுகளையும், கைஸ் அஹமட் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 29 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 3 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 43 ஓட்டங்களையும், 1 விக்கெட்டினையும் வீழ்த்திய பென் கட்டிங் தெரிவு செய்யப்பட்டார்.

பகிரவும்...