Main Menu

பார்வையாளர்களின் வருகை இன்றி ஈஃபிள் கோபுரம்!

பார்வையாளர்களின் வருகை இன்றி ஈஃபிள் கோபுரம் வெறிசோடி காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  சராசரியாக நாள் ஒன்றுக்கு 13,000 இல் இருந்து 14,000 வரையான பார்வையாளர்களை சந்திக்கும் ஈஃபிள் கோபுரம் தற்போது, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை வீழ்ச்சி அடைந்துள்ளமை காரணமாக சராசரியாக 2,000 பேர் வரை மாத்திரமே சந்திக்கின்றது. கிட்டத்தட்ட 7 மடங்கு குறைவான பார்வையாளர்களை ஈஃபிள் கோபுரம் இழந்துள்ளது.  இதனால் ஈஃபிள் கோபுரம் கணிசமான வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. ஊழியர்கள், பராமரிப்பு செலவீனம் போன்றமை பூதாகரமான விடயமாக மாறியுள்ளதாக அதன் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். ஈஃபிள் கோபுரம் உலகின் மிக முக்கிய அடையாளமாக உள்ளதால், ‘பார்வையாளர்கள் வருகை குறைவை’ காரணம் காட்டி ‘மூடமுடியாது’ எனவும் தெரிவித்துள்ளனர். 

பகிரவும்...