Main Menu

பாரிஸில் மறைவிடத்தில் பெருமளவு தங்கம் மீட்பு!தமிழர் ஒருவர் கைது!

பாரிஸ் நகரின் பத்தாவது நிர்வாகப் பகுதியில் மறைவிடம் ஒன்றில் இருந்து பெருமளவு தங்கம் ,பணம் மற்றும் பெறுமதிவாய்ந்த பொருள்களை பொலீஸ் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக தமிழர் ஒருவர் கைது செய்யப் பட்டிருக்கிறார்.பிரான்ஸின் சில ஊடகங்கள் இத்தகவலை வெளியிட்டுள்ளன.

பரிசில் இரகசிய அறை ஒன்றுக்குள் இருந்து கிலோ கணக்கில் தங்கம் மீட்கப்பட்டுள்ளது.  நேற்று புதன்கிழமை பரிஸ் 10 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒரு புகைப்பட கலையகம் ஒன்றின் பின் அறையில் தங்க நகைகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே அவர்கள் குறித்த கலையகத்தினை அதிரடியாக சுற்றி வளைத்துள்ளனர்.  

 அங்கிருந்து, தங்க ஆபரணங்கள், அதிக விலை கொண்ட ஆடம்பர கற்கள், கைக்கடிகாரங்கள் மற்றும் €100.000 யூரோவுக்கும் அதிகமான ரொக்கப்பணம் போன்றவை மீட்கப்பட்டுள்ளன.  

இந்த பொருட்களின் உரிமையாளர் யார் என காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும், முதல்கட்டமாக குறித்த கலையகத்தில் காவலரான பணிபுரிந்து வரும் 50 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. . அவர் Oise நகரில் வசித்து வருகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைதுசெய்யப்பட்டவர் நிதி ஆய்வு மற்றும் விசாரணையுடன் தொடர்புடைய படைப்பிரிவினரால் (Financial Research and Investigations Brigade) விசாரிக்கப்பட்டு வருகிறார் என்று ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

பகிரவும்...