Main Menu

பாடகருடன் நடிகை அமலா பால் திடீர் திருமணம்…?

நடிகை அமலா பால் மும்பையை சேர்ந்த பாடகர் பாவ்னிந்தர் சிங்கை திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைவா படத்தின் போது இயக்குனர் விஜய்யுடன் அமலாபாலிற்கு காதல் ஏற்பட்டது. அதை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்கள் இருவருக்கும் சில வருடங்களிலேயே விவாகரத்து ஏற்பட்டது.

அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த அமலா பால் மும்பை பாடகருடன் , பொது இடங்களில் செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின

தற்போது இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக புகைப்படத்தை பாவ்னிந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். ஆனால் பதிவிட்ட சிறிது நேரத்தில் அந்த புகைப்படங்களை நீக்கி உள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பே இருவருக்கும் திருமணம் நடந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

எனினும் இருதரப்பில் இருந்தும் திருமணம் தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

பகிரவும்...