Main Menu

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து!

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பேர்வேஸ் முஷாரப்பிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அவர் மீதான தேசத் துரோக வழக்கு விசாரணையை மேற்கொள்வதற்கு அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் சட்டவிரோதமானது என்றும் லாகூர் மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்புத் தொடர்பாகவும் மூன்று உறுப்பினர் கொண்ட நீதிமன்ற அமர்வினை அமைப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தும் பேர்வேஸ் முஷாரப் தாக்கல் செய்த மனுக்கள் இன்று (திங்கட்கிழமை) லாகூர் மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது குறித்த மனுக்களை ஆராய்ந்த நீதிபதிகள், சிறப்பு நீதிமன்றம் அமைப்பது என்பது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அறிவித்ததுடன் சிறப்பு நீதிமன்றம் அமைப்பதற்கான அறிவிப்பையும் ரத்துச் செய்தனர்.

மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் 18 அன்று சிறப்பு நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனை தீர்ப்பையும் ரத்துச் செய்து லாகூர் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என வழங்கறிஞர் ஒருவர் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

தேசத் துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பேர்வேஸ் முஷாரப்பிற்கு கடந்த ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி பெஷாவர் சிறப்பு நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...