Main Menu

பருவநிலை மாற்றத்திற்குக் தயாராக வேண்டும் – பான் கீ மூன்

உலக நாடுகள் பருவநிலை மாற்றத்திற்குக் கட்டாயம் தயாராகவேண்டும் என ஐ.நாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

பருவநிலை மாற்றத்திற்குத் தற்போது இருந்தே சிறந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் இழப்புக்கள் அதிகரிக்கம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள அடுத்த 10 ஆண்டுகளில் 1.8 டிரில்லியன் டொலர் தேவை என்று பருவநிலை அமைப்பான Global Commission on Adaptation தெரிவித்தது.

உலகநாடுகள் பருவநிலை மாற்றம் தொடர்பில் தற்போது எடுத்துவரும் நடவடிக்கைகள் போதுமானவை அல்ல என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

எனினும், முன்னெச்சரிக்கைக் கருவிகள், பருவநிலைப் பாதிப்பைத் தாக்குப்பிடிக்கும் உள்கட்டமைப்பு, சதுப்புநிலப் பாதுகாப்பு, சிறந்த விவசாய முறைகள், நீர்வளத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் நாடுகள் கவனம் செலுத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கைகளை 2030ஆம் ஆண்டுக்குள் எடுக்கத் தவறினால் வளந்து வரும் நாடுகளின் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள்
வறுமை நிலைக்குத் தள்ளப்படலாம் என்றும் ஐ.நாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...