Main Menu

பரிஸ் உட்பட – நாட்டின் பல மாவட்டங்களில் கொரோனா தொற்று வீதம் அதிகரிப்பு

நாட்டின் பல நகரங்களில் கொரோனா தொற்று வீதம் திடீரென அதிகரித்துள்ளது. ஒவ்வொரு 100.000 பேரிலும் 50 பேருக்கும் அதிகமானோருக்கு தொற்று ஏற்படும் மாவட்டங்களின் எண்ணிக்கை 12 இல் இருண்டு 37 ஆக அதிகரித்துள்ளன.  கடந்த 24 மணிநேர PCR பரிசோதனை முடிவுகளின் படி, தலைநகர் பரிசில் இன்று ஒவ்வொரு 100.000 பேருக்கும் 113,9 வீதமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  Hérault மாவட்டத்திலும் அதேபோன்று தொற்று வீதம் அதிகரித்துள்ளது. அங்கு தற்போது ஒவ்வொரு 100.000 பேரிலும்  148,4 வீதமானோருக்கு தொற்று உறுதி உறுதியாகின்றது. இந்த பட்டியலில் அடுத்ததாக 249,1 வீத தொற்றுடன் Haute-Corse (கடல்கடந்த) மாவட்டம் உள்ளது.  இறுதியாக, பிரான்சில் அதிகூடிய தொற்றுக்கள் பதிவாகும் Pyrénées-Orientales மாவட்டத்தில் இன்றைய தொற்று வீதம் 299,6 ஆக உயர்வடைந்துள்ளது. இங்கு நேற்று ஜூலை 18 ஆம் திகதியில் இருந்து 23.00 மணியுடன் அனைத்து உணவகம் மற்றும் மதுச்சாலைகள் அனைத்தும் மூடப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...