Main Menu

இணைய தளமூடாக போலி Pass Sanitaire விநியோகம்

இணையத்தளமூடாக போலியான சுகாதார பாஸ் (pass sanitaire) விநியோகம் இடம்பெறுவதாக காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.  முதல்கட்டமாக 6 பேர் கொண்ட குழு ஒன்றை கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.  Lyon, Val-de-Marne மற்றும் Yvelines மாவட்டங்களில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், ஸ்னாப்சாட் சமூகவலைத்தளமூடாக இவர்கள் போலியான சுகாதார பாஸ் விநியோகித்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாள் ஒன்றுக்கு 20 பாஸ் வரை இவர்கள் விநியோகித்திருந்ததாகவும், ஒவ்வொரு பாஸ் பெற்றுக்கொள்ளவும் 350 யூரோக்களில் இருந்து 500 யூரோக்கள் வரை கட்டணம் அறவிடப்பட்டுள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  குறித்த பாஸ்களை பெற்றுக்கொள்ளும் மக்களுக்கு அது போலியானது என்பதே தெரிந்திருக்கவில்லை எனவும், உண்மையாக QR குறியீடு கொண்ட ஆவணங்களையே அவர்கள் போலியாக தயாரித்து விநியோகித்துள்ளனர் என தெரியவந்துள்ளது.  அத்தோடு,  இது போன்ற மோசடிக்குள் பொதுமக்கள்  சிக்கிக்கொள்ளவேண்டாம் எனவும் காவல்துறையினர் கோரியுள்ளனர். 

பகிரவும்...