Main Menu

பரிசில் மீண்டும் மஞ்சள் மேலங்கி போராட்டம்

பிரான்சில் கடந்த 2018, 2019 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ‘மஞ்சள் மேலங்கி’ போராட்டம் (Gilets jaunes ) மீண்டும் தற்போது துளிர்விட ஆரம்பித்துள்ளது.

நேற்று முன்தினம் செபடம்பர் 10 ஆம் திகதி சனிக்கிழமை பரிசில் இந்த இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. மஞ்சள் மேலங்கி அணிந்துகொண்டு Porte de Saint-Cloud, Place de Colombie மற்றும் Trocadéro ஆகிய பகுதிகளில் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொதுச்சொத்துக்கள் பலதை அவர்கள் சேதம் விளைவித்ததாகவும், காவல்துறையினர் மீது தாக்குதல் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 103 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...