Main Menu

பணக்காரி போல வேடமிட்டு மோசடிசெய்த பெண்ணுக்குச் சிறை

நியூயார்க்கில் ஹோட்டல்கள், வங்கிகள் மட்டுமின்றி நண்பர்கள் சிலரிடத்திலும் தம்மைப் பெரும் பணக்காரிபோலக் காட்டிக்கொண்டு மோசடி செய்த ஜெர்மானியப் பெண்ணுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தண்டனைக் காலம் நாலாண்டிலிருந்து 12 ஆண்டுவரை நீடிக்கும் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

28 வயது ஏன்னா சொரோக்கின் (Anna Sorokin) விலை உயர்ந்த ஆடைகளில் வலம்வர ஆசைப்பட்டார். பணத்தைக் கொண்டு வாங்க வேண்டிய சொகுசுப் பொருள்களையும் சேவையையும் அவர் மோசடிசெய்து பெற்றதாக நீதிபதி கூறினார்.

200,000 டாலருக்கும் அதிகமான தொகையை ஏன்னா மோசடிசெய்ததாகக் கடந்த மாதம் நிரூபிக்கப்பட்டது.

தம்மிடம் 67 மில்லியன் டாலர் மதிப்பிலான சொத்து இருப்பதாகவும் ஏன்னா கூறியிருக்கிறார்.

இதுவரை நடந்தவற்றுக்கு அவர் வருத்தப்படுவதுபோலத் தெரியவில்லை என்று அரசாங்கத் தரப்பு வழக்குரைஞர்கள் கூறினர்.

நீதிமன்றத்துக்கு அணிந்துவருவதற்கான உடையை அவர் ஆடை அலங்கார வல்லுநர் கொண்டு தேர்ந்தெடுத்ததை அவர்கள் கண்டித்தனர்.  

பகிரவும்...