Main Menu

நோர்வே நிலச்சரிவு: இரண்டு நாட்களுக்குப் பின்னர் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு!

தெற்கு நோர்வேயில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது ஒன்பது கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர், ஒருவரின் சடலத்தை மீட்பு படையினர் கண்டெடுத்துள்ளனர்.

அந்த இடத்திலுள்ள பொலிஸ் நடவடிக்கையின் தலைவர் ராய் அல்க்விஸ்ட் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், ‘ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். துரதிர்ஷ்டவசமாக இந்த நபர் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது’ என கூறினார். எனினும், அந்த நபர் குறித்து எந்த விபரங்களையும் கொடுக்க மறுத்துவிட்டார்.

தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அண்டை நாடான சுவீடனில் இருந்து ஒரு தேடல் மற்றும் மீட்புக் குழு உதவியது.

தென்கிழக்கு நோர்வேயில் உள்ள ஜெஜெர்ட்ரம் நகராட்சியின் நிர்வாக மையமான அஸ்க் நகரில் ஒரு புதன்கிழமை பெரிய நிலச்சரிவு ஏற்பட்டதில், 10பேர் காயமடைந்ததோடு 21பேர் காணமல் போயினர்.

மேலும், நிலச்சரிவு ஏற்படுமோ என்ற அச்சத்தில் சுமார் 700 பேர் இப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

தலைநகர் ஒஸ்லோவிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜெஜெர்ட்ரம் நகராட்சியில் ஒரு குடியிருப்பு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.

பகிரவும்...